முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூடானில் நான்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலி

புதன்கிழமை, 6 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

சூடானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இந்நாட்டில் 1989 முதல் 2019 வரை ஒமர் அல்-பஷீர் அதிபராக செயல்பட்டார். அதன்பின்னர் மக்கள் போராட்டம் மற்றும் ராணுவ கிளர்ச்சியையடுத்து ஒமர் அல்-பஷீர் சூடான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி அரசு சூடானில் ஆட்சியமைத்தது. இந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில், சூடானில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் ஹர்டோமின் ஜப்ரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.  இதில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 4 பயங்கரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து