முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டொனால்ட் ட்ரம்ப்க்கு பெரும் பின்னடைவு

புதன்கிழமை, 6 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 400 பணக்காரர்களின் பட்டியலில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடம்பெறவில்லை. 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இதுகுறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அறிக்கையில், “75 வயதான டொனால்ட் ட்ரம்ப் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைப் போலவே தற்போதும் பணக்காரராக இருக்கிறார். ஆனால், கோவிட் -19 தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து சுமார் 600 மில்லியன் டாலரை இழந்துள்ளார்.

கிரிப்டோகரன்ஸிகள் மற்றும் தொழில்நுட்பப் பங்குகள் போன்ற சொத்துகள் சமீபத்திய மாதங்களில் நல்ல வளர்ச்சி பெற்றிருந்தாலும், ட்ரம்ப்பின் ரியல் எஸ்டேட் தொழில்களில் அவருக்கு வரவு ஏற்படவில்லை. இதன் காரணமாக அவர் பின்னடைவைச் சந்தித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனது செல்வத்தைப் பன்முகப்படுத்த ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பை அவர் தவறவிட்டுவிட்டார்.

ஆங்கில அகராதியில் புதிய கொரிய மொழிச் சொற்கள்

ஸ்க்விட் கேம், பிடிஎஸ் என பல்வேறு இணையம் சார்ந்த விஷயங்களில் கொரியர்கள் பிரபலமடைந்து வருகிறார்கள். சமீபத்தில் பாராசைட் என்கிற கொரிய மொழித் திரைப்படம் கூட ஆஸ்கர் விருதைக் வென்றது. இப்போது கொரிய மொழியை பூர்வீகமாகக் கொண்ட 26 சொற்கள் புதிய ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. 

அதில் சேர்க்கப்பட்டுள்ள சில சொற்கள் -  Banchan - அரிசிச் சோறோடு கொடுக்கப்படும் கொரிய காய்கறி உணவு, Bulgogi - மாடு அல்லது பன்றி இறைச்சியை மெலிதாக வெட்டி சமைக்கும் ஒரு வகையான உணவு, Kimbap - இதுவும் ஒரு வகையான ஷவர்மா அல்லது சூஷி ரோல் போன்ற ஒரு கொரிய உணவு.

சிங்கப்பூரில் 3,486 பேருக்கு  புதிதாக கொரோனா தொற்று

சிங்கப்பூரில்  ஒரே நாளில்  3,486- பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும்  9 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக உயிரிழந்தவர்களில் 3 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவகள். ஏனைய இருவர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். மீதமுள்ள 4 பேர் முழுமையாக தடுப்பூசிக்கொண்டவர்கள் ஆவர். உயிரிழந்த அனைவருக்கும் இணை நோய்கள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சிங்கப்பூரில் நர்சிங் ஹோம்களும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்களும் வைரஸ் அதிகம் பரவும் இடங்களாக உள்ளன. இதனால், அப்பகுதிகள் தீவிரமாக சுகாதாரத்துறை அதிகரிகள் கண்காணித்து வருகின்றனர்.  சிங்கப்பூரில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 09 ஆயிரத்து 804- ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்புடன் 23,463- பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 34 பேர் தீவிர பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர். 

தடுப்பூசி சான்றிதழ் அவசியம்: நியூசிலாந்து பிரதமர் அறிவிப்பு

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம் என நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது. அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்றார். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி இரண்டு வாரங்கள் நிறைவடைந்த பின்னரே சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து