முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலாகிறது: பழைய வாகனங்கள் மறுபதிவுக்கு எட்டு மடங்கு கட்டணம் உயர்வு

புதன்கிழமை, 6 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் பழைய வாகனங்கள் மறுபதிவு செய்வதற்கான கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.5 ஆயிரம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலாகிறது.

பழைய வாகனங்களை மறுபதிவு செய்வதற்கு ஏற்கனவே ரூ.600 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை மறுபதிவு செய்வதற்கான தொகை 8 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது.,

15 ஆண்டுகள் பழமையான கார்களை மறுபதிவு செய்ய தற்போது ரூ.600 ஆக உள்ள கட்டணம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 8 மடங்கு அதிகம் ஆகும். பழைய மோட்டார்சைக்கிள்களுக்கு ரூ.300 ஆக இருந்த மறுபதிவு கட்டணம் இனி ரூ.1000 ஆக உயர்த்தப்படுகிறது. பழைய பஸ்கள் மற்றும் லாரிகளுக்கு ரூ.1500 ஆக இருந்த மறுபதிவு கட்டணம் ரூ.12 ஆயிரத்து 500 ஆகவும், சிறிய சரக்கு வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களுக்கு கட்டணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பழைய வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் காலாவதியாகி இருந்தால் அன்றைய தினத்தில் இருந்து தினமும் ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படும். இவை தனியார் வாகனங்களாக இருந்தால் மாதத்துக்கு ரூ.300-ம், வர்த்தக வாகனங்களாக இருந்தால் ரூ.500-ம் அபராதமாக வசூலிக்கப்படும். இவை அனைத்தும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்குவரும்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து