முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்துக்கு உள்ளாகும் நபர்களுக்கு உதவி செய்தால் ரூ.5,000 பரிசுத்தொகை: மத்திய போக்குவரத்து துறை புதிய திட்டம்

புதன்கிழமை, 6 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு 5000 ரூபாய் வெகுமதி அளிக்கும் திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளது. 

இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை மற்றும் போக்குவரத்து துறைகளின் செயலாளர்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மோட்டார் வாகனம் காரணமாக நடைபெறும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கோல்டன் ஹவரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வோருக்கு பாராட்டு சான்றிதழுடன் 5000 ரூபாய் பரிசுத் தொகையும்  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பரிசு தொகை மற்றும் சான்றிதழ் தவிர, தேசிய அளவில் 10 விருதுகளும் வழங்கப்படவுள்ளன. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பரிசு தொகை மற்றும் சான்றிதழ் பெற்றவர்களில் மிகவும் தகுதியான 10 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும். இதனிடையே இந்த திட்டத்தின் மூலம் விபத்துகளில் சிக்குவோருக்கு உதவி அளிப்பதில் பொதுமக்களுக்கு உள்ள தயக்கம் நீங்கும் என்றும்  இதன் காரணமாக விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து