முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40 வருடங்களில் இல்லாத அளவு உறவில் சிக்கல்: சீன–தைவான் இடையே போர் மூளும் அபாயம்

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

 

தாய்பே : சீனா மற்றும் தைவான் இடையே 40 வருடங்களில் இல்லாத அளவு பதற்றம் நிலவுவதாக தைவானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இருநாடுகளுக்கும் இடையே ’தற்செயலமான தாக்குதல்’ நடைபெறும் ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். நான்கு நாட்களாக தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனா தொடர்ந்து ராணுவ ஜெட்களை ஏவி வருவதை அடுத்து தைவான் அமைச்சரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

தைவான் தன்னை ஒரு இறையாண்மை சுயாட்சை நாடாகதான் கருதுகிறது. ஆனால் சீனா தைவானை தனது நாட்டிற்கு உட்பட்ட ஒரு பகுதியாகவே பார்க்கிறது. வலுக்கட்டாயமாக தைவானை தனது நாட்டுடன் ஒன்றுசேர்க்கும் வாய்ப்பு இருப்பதை சீனா நிராகரிக்கவில்லை. தைவானின் வான் பாதுகாப்பு மண்டலம், தைவான் ஜலசந்தி மற்றும் சீன பெருநிலப்பரப்பின் ஒரு பெரும் பகுதியை அடக்கியுள்ளது. சீனா மற்றும் தைவானுக்கு இடையே உள்ள அதிகாரபூர்வமற்ற எல்லையை கடப்பதை தைவான் ஊடுறுவலாகதான் பார்க்கிறது.

தைவானை சீனா 2025ஆம் ஆண்டிற்குள் முழுவதுமாக கைப்பற்றி இருக்ககும் என்றும் தைவானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சுகோ செங் தெரிவித்துள்ளார். அவர் தைபேயில் நாடாளுமன்ற கமிட்டியின் சார்பாக பேசினார். அமைச்சர் செங் ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பலை உருவாக்கும் பல மில்லியன் டாலர் மதிப்பிலான வரைவு ஒன்றையும் பரிசீலுக்குமாறு தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் தைவானை ஆக்கிரமிக்கும் திறன் ஏற்கனவே உள்ளது என்று ஒப்புக் கொண்டுள்ள அவர் வரும் வாரங்களில் அது மேலும் எளிதானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 1949ஆம் ஆண்டு சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தைவான் சீனாவிடமிருந்து பிரிந்தது. தைவான், ஒரு சுயாதீன நாடு என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முயற்சிகளை நோக்கி அந்நாடு நகர்வது சீனாவுக்கு ஒரு பெரும் கவலையாகவே உள்ளது என்றும் அதன் அதிபர் சார் இங்வென் அது நோக்கிய எந்த நடவடிக்கை எடுப்பதையும் சீனா தடுக்கிறது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து