முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்டோரா பேப்பர்ஸ் விவகாரம்: இலங்கை அதிபரின் உறவினர்கள் பெயர்கள் இடம்பெற்றதால் சர்ச்சை

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கொழும்பு : பண்டோரா பேப்பர்ஸ் விவகாரத்தில் இலங்கை அதிபர் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றதால் அங்கு புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

உலகிலுள்ள அரசத் தலைவர்கள் உள்ளிட்ட பலரது ரகசிய சொத்துக்களை வெளிப்படுத்திய பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணம், இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் குறித்த, தகவல்களும் இந்த ஆவணத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளளது. திருக்குமார் நடேசன் மற்றும் நிருபமா ராஜபக்ஷ ஆகிய தம்பதிகள் தொடர்பிலான ரகசிய தகவல்களே, இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. நிருபமா ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் குடும்ப உறுப்பினராவார்.

நிருபமா ராஜபக்ஷ, பிரபல தொழிலதிபரான திருக்குமார் நடேசன் என்ற தமிழரை திருமணம் செய்துள்ளார். இந்த இருவர் தொடர்பிலான தகவல்கள், தற்போது பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, சேமோவா, பிரித்தானியாவிற்கு சொந்தமான விர்ஜின் தீவு மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் 8 நிறுவனங்களை ஆரம்பித்துள்ளதாக இந்த ரகசிய ஆவணங்களின் ஊடாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தனக்கு 160 மில்லியன் டாலர் சொத்து காணப்படுகின்றமைக்கான ஆவணங்களை, திருக்குமார் நடேசன், தனது ஆலோசகருக்கு 2011ம் ஆண்டு காலப் பகுதியில் அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பண்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பிலான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து