முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் 100 இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் இந்தியாவிலேயே பெரும் கோடீஸ்வரர் என்ற பெருமையை ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவிலான டாப் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2021ம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.

கொரோனா தாக்கத்தில் உருண்டோடிய இந்த ஆண்டில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு சுமார் 50% அளவுக்கு அதிகரித்திருக்கிறது. முதல் 100 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 775 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதில் கடந்த 12 மாதங்களில் மட்டும் 257 பில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது. ஃபோர்ப்ஸ் இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் நூறு பேரில் 61 பேரின் சொத்து மதிப்பில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. மேலும் 80 சதவிதத்துக்கும் அதிகமானோருக்கு சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் 100 இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் இந்தியாவிலேயே பெரும் கோடீஸ்வரர் என்ற பெருமையை ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் பிடித்துள்ளார். 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து முகேஷ் அம்பானியே நம்பர் 1 கோடீஸ்வரராக திகழ்கிறார். அவரின் சொத்து மதிப்பு 92.7 பில்லியன் டாலர்கள் ஆகும். அம்பானியை தொடர்ந்து இந்தியாவின் நம்பர் 2 கோடீஸ்வரர் என்ற பெருமையை, கவுதம் அதானி பெற்றிருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு 74.8 பில்லியன் டாலர்கள் ஆகும்.

அதானியை தொடர்ந்து 31 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஹெச்.சி.எல் நிறுவன தலைவருமான சிவ நாடார் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். இதே போல டி-மார்ட் நிறுவனரான ராதாகிருஷ்னன் தமானி, 4வது இடத்தை தக்க வைத்திருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு 29.4 பில்லியன் டாலர்கள் ஆகும். தடுப்பூசி தேவை அதிகரித்ததன் காரணமாக சைரஸ் பூனாவாலா டாப் 5 கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலர்கள் ஆகும்.

இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர்கள் பட்டியல்: (டாலர்கள் மதிப்பில்)

 

1. முகேஷ் அம்பானி - 92.7 பில்லியன், 2. கவுதம் அதானி - 74.8 பில்லியன், 3. சிவநாடார் - 31 பில்லியன், 4. ராதாகிருஷ்ணன் தமானி - 29.4 பில்லியன், 5. சைரஸ் பூனாவாலா - 19 பில்லியன், 6. லக்‌ஷ்மி மிட்டல் - 18.8 பில்லியன், 7. சாவித்ரி ஜிண்டால் - 18 பில்லியன், 8. உதய் கோட்டக் - 16.5 பில்லியன், 9. பலோன்ஜி மிஸ்திரி - 16.4 பில்லியன், 10. குமார் பிர்லா - 15.8 பில்லியன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து