முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவுடன் போர் மூளும் அபாயம்: டிரம்ப் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த பைடன் வெற்றி பெற்றார்.  தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு எழுப்பினார். எனினும், பெருவாரியான வாக்குகளை பெற்ற பைடன் அதிபராக முறைப்படி தேர்வானார்.  இந்த நிலையில், டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதுடன், பலவீன மற்றும் ஊழல் நிறைந்த தலைமையை கொண்ட அரசு அமெரிக்காவில் நடக்கிறது என பைடனை சாடியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், அமெரிக்காவை நீண்ட நாட்களாக சீனா மதிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.  தைவான் அருகே, சீன விமானப்படை எண்ணற்ற போர் பயிற்சிகளை மேற்கொண்டது.இதனால், அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.  இதனை தணிக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் உயரதிகாரிகள் இடையே சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த சூழலில், முன்னாள் அதிபர் டிரம்ப், சீனாவுடன் அமெரிக்கா போர் தொடுப்பதில் சென்று முடியும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அர்ஜெண்டினாவில்  குழந்தைகளுக்கு தடுப்பூசி 

அர்ஜெண்டினாவில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்து, மொத்தம் 52 லட்சத்து 63 ஆயிரத்து 219 கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்து 379 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில்,  சினோபார்ம் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான அவசர கால அனுமதியை  அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.இந்த தகவலை அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கார்லா விசோட்டி தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் சுமார் 6 மில்லியன் குழந்தைகள் உள்ளனர். 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு  இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர்  தெரிவித்தார். இந்த நடவடிக்கை, ‘தனி மனித கற்றல் முறை’ மீண்டும் தொடர்ந்து நடைபெற உதவும் என்று அந்நாட்டு கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆப்கான் பள்ளியில் குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டில் கோஸ்ட் மாகாணத்தில் மதம் சார்ந்த ஒரு பள்ளி கூடமொன்று இயங்கி வருகிறது.  இந்த நிலையில், கையெறி குண்டு ஒன்று அந்த பள்ளியில் வெடிக்க செய்யப்பட்டு உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது.  15 பேர் காயமடைந்து உள்ளனர்.

கடந்த ஞாயிற்று கிழமை காபூலில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர்.  32 பேர் காயமடைந்து உள்ளனர்.  இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.

'செல்பி' புகழ்  கொரில்லா மரணம்

2019-ஆம் ஆண்டில் காங்கோவில் வன பாதுகாவலர்  மேத்யூ ஷவாமுடன்  செல்பி போஸ் கொடுத்து பிரபலமடைந்த நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2  கொரில்லா குரங்குகளில் ஒன்று நடாகாஷி அதன் பாராமரிப்பாளரின் மடியிலேயே  உயிரை விட்டது.

 

14 வயதாகும் நடாகாஷி என்ற பெயருடைய அந்த பெண் கொரில்லா உடல்நலக் குறைவால் இறந்ததாக விருங்கா தேசிய பூங்கா தெரிவித்துள்ளது. 2019-ல் அதனுடன் செல்பி எடுத்து வெளியிட்ட வன பாதுகாவலரும் பராமரிப்பாளருமான  மேத்யூ ஷவாமு வின் மடியிலேயே நடாகாஷி  இறுதி மூச்சை விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து