முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லக்கிம்பூர் வன்முறை சம்பவம்: இன்று அறிக்கை தாக்கல் செய்ய உ.பி.க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

லகிம்பூர் வன்முறையில் யார் மீதெல்லாம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்? யார் மீதெல்லாம் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது? என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூரில் கடந்த 3-ந்தேதி பா.ஜ.க.வினர் சென்ற கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் இரண்டு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. மத்திய மந்திரி இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதால் விசாரணை முறையாக நடைபெற வாய்ப்பில்லை. இதனால் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லகிம்பூர் வன்முறையில் யார் மீதெல்லாம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது?, யார் மீதெல்லாம் எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை), பதிவு செய்யப்பட்டுள்ளது?, யாரெல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர்? விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பதை இன்றைக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று நடைபெறும் என்று கூறிய தலைமை நீதிபதி வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து