முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகள் வெறிச்செயல்: காஷ்மீரில் 2 ஆசிரியர்கள் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

காஷ்மீரில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். 

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்மு மாவட்டத்தில் இட்ஹா சங்கம் என்ற பகுதியில் அரசுப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் நேற்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, அந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் தலைமை ஆசிரியர் உள்பட 2 ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதையடுத்து, பிற ஆசிரியர்கள் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட 2 ஆசிரியர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 ஆசிரியர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ஆசிரியர்களும் சுவேந்தர் கவுர் மற்றும் தீபக் என்பது தெரியவந்துள்ளது. ஆசிரியர்கள் இருவரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் இந்து, இஸ்லாமிய ஆசிரியர்களை பிரித்துள்ளனர். 

 

இந்த 2 ஆசிரியர்களும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்ததையடுத்து அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் கடந்த சில நாட்களாக மத ரீதியிலாக குறிப்பிட்ட மக்களை குறிவைத்து தாக்குதல்களை பயங்கரவாதிகள் அரங்கேற்றி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் 3 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது ஜம்மு-காஷ்மீர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து