முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணியின் போது கொரோனாவால் உயிரிழந்த 2,800 குடும்பத்தினருக்கு வேலை - ரயில்வே துறை அறிவிப்பு

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

பணியின் போது கொரோனாவால் உயிரிழந்த 2,800 குடும்பத்தினருக்கு வேலை வழங்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா பாதிப்பின் போது அத்தியாவசிய தேவைக்காக தொடர்ந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.இந்த நிலையில் ரெயில்வே ஊழியர்கள் பலர் கொரோனா தாக்கி உயிரிழந்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி இதுவரை 3,256 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் ரெயில்வேயில் வேலை தர வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் வற்புறுத்தி வந்தன.

அதிகாரிகளில் இருந்து கடைநிலை ஊழியர்கள் வரை உயிரிழந்து இருந்தார்கள். அவர்கள் குடும்பத்தினரின் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதை ரெயில்வே துறை பரிசீலித்தது. அதைத் தொடர்ந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வேலை வழங்க முடிவு செய்தனர். 3,256 பேர் இறந்தாலும் குடும்பத்தினருக்கு வேலை கொடுக்கும் தகுதியை 2,800 பேர்தான் பெற்று இருந்தனர். அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

 

இதில் பெரும்பாலும் கடை நிலை ஊழியர் பணி ஆகும். சிலருக்கு உரிய கல்வித்தகுதி இல்லை. தேவையான உயர் கல்வியை பெற்றதற்கு பிறகு வேலைவாய்ப்பு வழங்கப்படும். சில குடும்பங்களின் வாரிசுகள் சிறுவர்களாக உள்ளனர். அவர்களுக்கு 18 வயதானதும் வேலை வழங்கப்படும். பெரும்பாலான வேலைகள் 4 மாதத்துக்குள் வழங்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து