முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது தலைமையகத்தை மாற்றியது ' டெஸ்லா '

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்து டெக்சாஸ் மாகாணத்துக்கு மாற்ற உள்ளது என்று அந்த நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.  உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா தனது தலைமையகத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்து டெக்சாஸ் மாகாணத்துக்கு மாற்ற உள்ளது என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ஈலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள டெஸ்லா ஆலை ஒன்றின் கோவிட் நடவடிக்கைகள் தொடர்பாக டெஸ்லா நிறுவனத்துக்கும் மாகாண அரசுக்கும் உரசல் உண்டானது. கலிஃபோர்னியாவில் ஊழியர்களுக்கு குறைந்த விலையில் வீடுகள் கிடைப்பதும் கடினமாக உள்ளது என்று பங்குதாரர்களுக்கு மஸ்க் தெரிவித்துள்ளார்.

_______________

இந்தியர்களுக்கு தளர்வை அறிவித்தது இங்கிலாந்து

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. இதன்படி இரண்டு டோஸ் தடுப்பூசியும் பெற்ற இந்தியர்கள் இனிமேல் பிரிட்டன் சென்றால் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. கட்டாய கொரோனா பரிசோதனையும் இனி தேவையில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 11-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

____________

பாக். தனிமைப்படுத்தப்படும்: அமெரிக்க அதிகாரி கணிப்பு

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை நிறுத்தவில்லை என்றால் எந்த நாடுகளும் பாகிஸ்தானுக்கு உதவ முன்வராது என அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கணித்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகராக இருந்த மேக் மாஸ்டர் கூறியதாவது., ல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து இருப்பதுடன், அவர்களை வளர்த்துவிடும் செயல்களை செய்து வருகிறது. வ்வளவோ சொல்லியும் பாகிஸ்தான் திருந்தியது போல் இல்லை.

பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த வேண்டுமென்ற குறிக்கோளுடன் அமெரிக்கா கடந்த காலங்களில் ஏராளமாக உதவியது. ஆனால் டிரம்ப் ஆட்சி காலத்தில் இந்த உதவிகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டன. பைடன் ஆட்சியிலும் உதவிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் அவ்வாறு செய்யவில்லை என்றால் அமெரிக்க உள்ளிட்ட எந்த நாடுகளும் பாகிஸ்தானுக்கு உதவ முன்வராது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

____________

தமிழக பள்ளிகள் குறித்த ஆய்வறிக்கை வெளியீடு

79 சதவீத பள்ளிகளில் வகுப்பறைகள் நல்ல முறையில் இருப்பதாகவும், 24 சதவீத பள்ளிகள் மட்டுமே இணையதள வசதியுடன் செயல்படுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. யுனெஸ்கோ நிறுவனம் இந்திய அளவில் பள்ளி கல்வியின் நிலை குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வின் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என்ற தகவலை வெளியிட்டு இருந்தது.

2021 ஆண்டுக்கான மாநிலத்தின் கல்வி அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 61 சதவீத பள்ளிகளில் நூலகம் உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக கழிப்பிட வசதி இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. 94 சதவீத பள்ளிகளில் குடிநீர் வசதி இருப்பதாகவும், 93 சதவீத பள்ளிகள் மாணவர்களுக்கு கழிப்பிட வசதியும் 97 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பிட வசதியும் செய்யப்பட்டு இருப்பதாக அறிக்கை தெரிவிக்கின்றது. 79 சதவீத பள்ளிகளில் வகுப்பறைகள் நல்ல முறையில் இருப்பதாகவும், 24 சதவீத பள்ளிகள் மட்டுமே இணையதள வசதியுடன் செயல்படுவதாகவும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து