முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

89-வது விமானப்படை தினம்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

இந்திய விமானப்படையின் 89-வது தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமர் மோடி, ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய விமானப்படையின் 89-வது தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய விமான படை கடந்த 1932ம் ஆண்டு அமைக்கப்பட்டது.  இந்திய விமான படையின் 89வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, புதுடெல்லியில் உள்ள காஜியாபாத் பகுதியில் அமைந்த ஹிண்டன் விமான படை நிலையத்தில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 8ம் தேதி இந்திய விமான படை தினம் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. விமான படை அணிவகுப்பும் நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு புதுடெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் முப்படைகளின் தளபதிகள் நேற்று மரியாதை செலுத்துகின்றனர்.

இதில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவானே, இந்திய விமான படை தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரி மற்றும் இந்திய கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் ஆகிய முப்படைகளின் தளபதிகள் நேற்று மலர்வளையம் வைத்து வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்தினர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்திய விமான படை தினத்தை முன்னிட்டு தெரிவித்த வாழ்த்து செய்தியில், ‘‘விமானப்படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு விமானப்படை தினவிழா வாழ்த்துக்கள். இந்திய விமானப்படையால் நாடு பெருமை கொள்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி இந்திய விமான படை தினத்திற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய விமான படை என்றால் தைரியம், விடாமுயற்சி மற்றும் தொழில்முறை என்ற பொருள்படும்.  சவாலான தருணங்களில் மனிதநேய உணர்வுடன் செயல்பட்டு நாட்டை காக்கும் பணியில் தனித்துவமுடன் தங்களை அடையாளம் காட்டியுள்ளனர். இந்த தினத்தில் நம்முடைய விமான படை வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து