முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா ராஜ்பவனில் கவர்னர் தமிழிசை நடனம்

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருமலை : தெலுங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற பதுக்கம்மா விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பெண்களுடன் பாரம்பரிய நடனம் ஆடி அசத்தினார்.

இந்தியா முழுவதும் நவராத்திரி திருவிழா நடக்கும் அதே காலகட்டத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பதுக்கம்மா திருவிழா  9 நாள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த நாட்களில் தெலுங்கானா பெண்கள், வீட்டையும், தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து இறைவனை வழிபட்டு  மகிழ்வார்கள்.

வண்ண மலர் கோலமாக இந்த விழா இருப்பதால் இதனை தெலுங்கானா வண்ணவிழா என்றும் அழைக்கப்படும். பூக்களை கொண்டு கொண்டாடப்படுவதால் தெலங்கானாவின் ஒவ்வொரு இடங்களிலும் வித்தியாசமான பூக்களை கொண்டு, இத்திருவிழா வண்ணக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா தெலுங்கனாவின் கலாசார பெருமையை வெளிப்படுத்தும் அம்சமாக, அனைவராலும் போற்றப்படும் விழாவாகும். அவ்வாறு கொண்டாடக்கூடிய பதுக்கும்மா திருவிழா ராஜ்பவனில் நடைபெற்றது.

இதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பாரம்பரிய முறைப்படி பெண்களுடன் சேர்ந்து மலர் கரகத்தை  நடுவில் வைத்து பெண்களுடன் சேர்ந்து கும்மி அடித்து நடனமாடி கொண்டாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து