முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனநாயக முறையில் உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டும் : முன்னாள் அமைச்சர்கள் கலெக்டரிடம் மனு

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : உயர் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைப்படி ஜனநாயக முறையில் உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் செல்லூர்.கே.ராஜூ, ஆர் பி உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ ஆகியோர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

மதுரை மாவட்ட 16-வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தல் இன்று நடைபெறுகிறது.  இதில் அ.தி.மு.க. சார்பில் தமிழழகன் போட்டியிடுகிறார் இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்ட கலெக்டரிடம் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார்,  செல்லூர் கே.ராஜு ,மாவட்டக் கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

பிறகு முன்னாள் அமைச்சர். ஆர்.பி உதயகுமார் கூறியதாவது

மதுரை மாவட்டம் 16வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நாளை (இன்று) நடைபெறுகிறது இதில் 97 வாக்குச் சாவடி உள்ளது ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து 3 நாட்களுக்கு முன்பாக புகார் மனு கொடுக்கப்பட்டது .தேர்தல் நடைபெறும் 97 வாக்குச்சாவடிகளில் உரிய பாதுகாப்பை வழங்கிடவேண்டும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் வாக்காளர்களை அச்சுறுத்துகின்றனர் மேலும் வாக்காளருக்கு சேலை கொடுக்கின்றனர் ஏற்கனவே செய்த திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி கொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம்  கூறினால் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர் இதன்மூலம் அ.தி.மு.க.வின் வெற்றியை தடுக்க பார்க்கின்றார்கள். ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்திட வேண்டும் மேலும் முழு பாதுகாப்பை வழங்கிட வேண்டும் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறி முறைப்படி தேர்தலை ஜனநாயக முறையில் நடத்திட வேண்டும் குறிப்பாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சி.சி.டி.வி. கேமரா அமைத்திட வேண்டும் சில இடங்களில் வாக்குப்பதிவின் போதும் வீடியோ  பதிவை‌ ஏற்பாடு செய்ததாக கூறி வருகின்றனர் அதை தவிர்த்து அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் நேர்மையாக நடத்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்

கடந்த முறை மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 8500 வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம் தற்போது இந்த இடைத்தேர்தலில் மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். எங்கள் வெற்றியை தடுத்திட வேண்டும் என்று பல்வேறு முறைகேடுகளை ஆளுங்கட்சியினர் செய்து வருகின்றனர் ஆகவே ஏற்கனவே இது குறித்து ஏற்கனவே புகார் மனு அளித்துள்ளோம் தற்போது ஜனநாயக முறையில் உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்படி தேர்தலைநடத்திட வேண்டும் இதில் ஆளுங்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர் ஆகவே தேர்தலை நியாயமாக‌ நடத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ,மாவட்ட ஆட்சியர், டி.ஜி.பி. ,தென் மண்டல ஐ.ஜி., மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு அளித்துள்ளோம்.அதுமட்டுமல்லாது இந்த தேர்தலில் அரசு இயந்திரத்தை பயன்படுத்துகின்றனர்.

அதுமட்டுமல்லாது பல்வேறு பத்திரிக்கைகளில் இந்த உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறிவருகின்றனர் ஆகவே இந்த தேர்தலை ஜனநாயக முறையில் நடத்திட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், பெரியபுள்ளான்என்ற செல்வம்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.மாணிக்கம், எஸ்.எஸ். சரவணன், தமிழரசன், அண்ணாதுரை உட்பட பலர் இருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து