முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும்: ஐ.நா. சபையில் இந்தியா அறிவிப்பு

சனிக்கிழமை, 9 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் புதிய தடுப்பூசிகளின் வருகையால் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்பட உள்ளதாக டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஐ.நா  சபைக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர்  டி.எஸ்.திருமூர்த்தி, ஐ.நா. சபையின்  ‘முன்னேற்றத்தை நோக்கி 2030 - நிகழ்ச்சி நிரல்’ குறித்த பொது விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இந்தியா கொரோனா காலகட்டத்தில் பல்வேறு மருத்துவ உதவிகள் மற்றும் தடுப்பூசிகளை உலகிற்கு அளித்துள்ளது. தடுப்பூசிகள் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்களின் சந்தை எப்போதும் வெளிப்படையாக இருக்க வேண்டும். 

பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளது போல், கொரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வர கடுமையாக உழைத்து வருகிறோம். தடுப்பூசிகளின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், உபரியாக உள்ள தடுப்பூசிகளை ‘கோவாக்ஸ்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘வேக்சின் மைத்ரி’ நிகழ்ச்சி மூலமாக  ஏற்றுமதி செய்யப்படும். கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக இந்திய அரசாங்கம் கொரோனா தடுப்பூசிகளின் ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளது.

இதுவரை 6 கோடியே 60 லட்சம் தடுப்பூசிகளை சுமார் 100 நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் கோவின் இணையதளம் உலகிற்கு கொடுக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.‘உலகம் முழுதும் ஒரே குடும்பம்’ என்னும் கருத்தின் அடிப்படையில் கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட சர்வதேச சமூகம் ஒன்று சேர வேண்டும். இவ்வாறு அவர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து