முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கள் நாட்டினரை முழுமையாக மீட்க தலிபான்களுடன் கத்தாரில் அமெரிக்கா பேச்சுவார்த்தை

சனிக்கிழமை, 9 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்கடன் : ஆப்கானில் இருந்து தங்கள் நாட்டினரை மீட்க தலிபான்களுடன் கத்தாரில் அமெரிக்கா இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதை அடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து அங்கு பெண்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லவும், வேலைக்கு வரவும் தடை விதித்துள்ளதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அமெரிக்க ராணுவம் வெளியேறியபோது, அமெரிக்கர்கள் அனைவரும் வெளியேறி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் இன்னும் சில அமெரிக்கர்களும், அமெரிக்க ராணுவத்திற்கு உதவியவர்களும் ஆப்கானிஸ்தானிலேயே இருப்பதாகவும், அவர்களை மீட்க வேண்டும் எனவும் கூறப்பட்டு வந்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களை மீட்பதற்கான முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. 

அமெரிக்கா தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதற்காக உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவையும் அமைத்துள்ளது. இதேபோல் தலிபான்கள் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-தலிபான் தலைவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை கத்தார் தோஹாவில் 2 நாட்கள் நடக்கிறது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, 105 அமெரிக்கர்கள், 95 கீரின் கார்டு ஹோல்டர்ஸ் மற்றும் அமெரிக்க ராணுவத்திற்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவியவர்களை மீட்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க கூடிய அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலிபான்கள் சார்பில் பங்கேற்ற கூடியவர்கள் குறித்து எந்த தகவலும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து