முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் கட்ட தேர்தல்: 35 ஒன்றியங்களில் நடைபெற்ற விறுவிறுப்பான வாக்குப்பதிவு: வரும் 12-ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்

சனிக்கிழமை, 9 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு 35 ஒன்றியங்களில் நேற்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று வாக்களித்தனர். வரும் 12-ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன. கிராம பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு பொதுமக்கள் தனித்தனியாக வாக்குகளை செலுத்தினர்.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் 14,662 பதவிகளுக்கு கடந்த 6-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. அன்று 77.43 சதவீத ஓட்டுக்கள் பதிவானது.

இந்த 9 மாவட்டங்களில் நேற்று 35 ஒன்றியங்களில் 12,341 இடங்களுக்கு நேற்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி, 1,324 பஞ்சாயத்து தலைவர் பதவி, 10,329 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் என மொத்தம் 12,341 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. 6,652 வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். 

கிராம பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு தனித்தனியாக வாக்குகளை செலுத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதற்கான அறிகுறி உள்ளவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

 

வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் 74 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த மையங்களில் ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருகிற 12-ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வருகிற 20-ம் தேதி பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து