முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்காசியாவிலேயே தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலம் தமிழ்நாடு - முதல்வர் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 10 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தெற்காசியாவிலேயே தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலம் தமிழ்நாடுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னையில் நடந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-

தெற்காசியாவிலேயே தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலம் தமிழ்நாடு. புதிய தொழில்களை தொடங்குவதற்கான உள்கட்டமைப்பை சீர்செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அனைத்து மாவட்டங்களையும், அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே தமிழக அரசின் நோக்கம். தி.மு.க. அரசின் 4 மாத ஆட்சி காலத்தில் தொழில்துறை புத்துணர்ச்சி அடைந்து உள்ளது. ஏற்றுமதியில் இந்தியாவிலேயே 3-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 3-வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டுவர தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து