முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 3 மாவட்டங்களில்தான் டெங்கு அதிகம் : ராதாகிருஷ்ணன்

ஞாயிற்றுக்கிழமை, 10 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் கடலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில்தான் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது எனவும் இதுவரை மூவர் மட்டுமே டெங்குவால் இறந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மருத்துவக் கண்காட்சியைத் தொடங்கிவைத்த சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில்தான் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்குவுக்கு இந்த ஆண்டு இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். 375 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மாவட்டந் தோறும் தினமும் உறுதி செய்யப்படுகிறது.

மக்கள் தங்களது இல்லங்களைச் சுற்றி மழை நீர் தேங்காமல் கண்காணிக்க வேண்டும்.சேலம், திருச்சி,கடலூர் போன்ற பகுதிகளில் பூச்சியியல் வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசியைப் பொறுத்தவரை, போலியோவைப் போல் கொரோனா ஒழிக்கப்பட்ட நோய் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவேண்டும்.

இதுவரை மொத்தமாக, 5.03 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரசு மூலம் 4.78 கோடி டோஸ் தடுப்பூசியும், தனியார் மூலம் 25.70 லட்சம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 3.74 கோடி டோஸ் முதல் தவணை தடுப்பூசியும், 1.29 கோடி டோஸ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் உயிரிழந்தவர்களில் 96 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். உயிரிழந்தவர்களில் 4 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இவர்களும் வேறு இணை நோய்களினால்தான் உயிரிழந்தனர். பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே உயிரிழந்துள்ளனர். மேற்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்துள்ளது.

ஆனாலும் போலியோவைப் போல் கொரோனா ஒழிக்கப்பட்ட நோய் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவேண்டும்.

இதுவரை, தமிழகத்தில் 20 லட்சம் பேர் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. இது மிகவும் சவாலான சிக்கலாக இருக்கிறது.

தமிழகத்தில் 48.6 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும் 7 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன. 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து