முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல் காதிர் கான் மறைவுக்கு பிரதமர் இம்ரான் கான் இரங்கல்

திங்கட்கிழமை, 11 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

இந்தியாவில் பிறந்து, பாகிஸ்தானுக்கு குடிபெயரந்து அந்நாட்டின் அணு ஆயுதத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட அப்துல் காதிர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்.அவருக்கு வயது 85. அவருடைய மறைவிற்கு பாக். அதிபர் மற்றும் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரிக்கப்படாத பாரத தேசத்தில் மத்தியப் பிரதேசம் தலைநகர் போபால் நகரில் கடந்த 1936ம் ஆண்டு பிறந்தவர் ஏ.கியூ.கான். அதன்பின் 1947ம் ஆண்டு பாகிஸ்தான் பிரிவினையின்போது, கான் குடும்பத்தினர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர். பாகிஸ்தானுக்கு முதன்முதலில் அணுஆயுதம் தயாரி்த்துக் கொடுத்து வல்லமை சேர்த்த அணுஆராய்ச்சி வல்லுநரான கான், பல்வேறு காரணங்களால் கடந்த 2004ம் ஆண்டு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

உடல்நலக்குறைவு மற்றும் திடீர் மூச்சு திணறால் அவதிப்பட்ட ஏ.கியூ.கான் நேற்று அதிகாலை கான் ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை 7மணிக்கு காலமானார். மருத்துவமனை தரப்பில் கூறுகையில் “ கானின் நுரையீரலில் ரத்தப் போக்கு ஏற்படத் தொடங்கியபின் அவரின் உடல்நிலை படிப்படியாக மோசமடையத் தொடங்கியது” எனத் தெரிவித்தனர்.

ஏ.கியூ.கான் மறைவு குறித்து பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ டாக்டர் அப்துல் காதிர் கான் மறைவுசெய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். தனிப்பட்ட முறையில் கடந்த 1982-ம் ஆண்டு முதல் எனக்குஅவரைத் தெரியும். தேசத்துக்கான அணு ஆயுதத் திட்டத்தை உருவாக்க உதவியவர், அவரின் சேவையை இந்ததேசம் மறக்காது” எனத் தெரிவித்தார்.

 

பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், “ டாக்டர் அப்துல் காதிர் கான் மறைவு செய்திகேட்டு மிகவும் துன்பப்பட்டேன். தேசத்துக்கு அணு ஆயுதத்தை வடிவமைத்த கானின் சேவை தேசத்தால் விரும்பப்பட்டது, தேசமும் அவரை நேசித்தது. அணுஆயுதத்தைவிட பெரிய ஆக்ரோஷமான அண்டை நாட்டினரிடம் இருந்து பாதுகாக்க கானின் சேவை உதவியது. பாகிஸ்தான் மக்களுக்கு அப்துல் காதிர் கான் மிகப்பெரிய அடையாளம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து