முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் மூன்று இடங்களில் தற்காலிக சிறப்பு பஸ் நிலையங்கள்

திங்கட்கிழமை, 11 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஆயுதபூஜையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காகவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் சென்னையில் 3 இடங்களில் தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான மக்கள் பயணம் செய்வார்கள், பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (டிஎன்எஸ்டிசி) மற்றும் மாநில விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்இடிசி) மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

கடந்த வருடங்களில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்காக பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு ஆயுத பூஜை விழாவிற்காக இன்று, நாளையும் 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேடுலிருந்து பயணிகள் சிறப்பு பேருந்து நிலையங்களை அடைய எம்டிசி சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்கிறது.  பயணிகள் தங்கள் பயணத்தின் போது அனைத்து கோவிட் விதிமுறைகளையும் பின்பற்றவும் மற்றும் தவறாமல் முககவசம் அணியவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

டிஎன்எஸ்டிசி மற்றும் ஆம்னி பேருந்துகள் கீழ்காணும் வழித்தடங்களில் இயக்கப்படும். 

1)  கோயம்பேடிலிருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்லும் அனைத்து டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் தாம்பரம் செல்ல 100 அடி சாலையில் செல்லாது, அதற்கு பதிலாக பூந்தமல்லி உயர் சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை, மதுரவாயல் டோல் பிளாசா வழியாக தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூர் சென்றடையும்.

2)  வழக்கம் போல் எஸ்இடிசி பேருந்துகள் பூந்தமல்லி உயர் சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளி வளைய சாலை வழியாக சென்று வண்டலூரைச் சென்றடையும். இந்த பேருந்துகள் தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூர் வழியாக செல்லாது.

3)   இதேபோல் கோயம்பேட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பூந்தமல்லி உயர் சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை, மதுரவாயல் டோல் பிளாசா மற்றும் பெருங்குளத்தூர் வழியாக செல்ல வேண்டும்.

4)  இசிஆர் நோக்கி ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, கத்திப்பாரா, கிண்டி, சர்தார் படேல் சாலை (ஓஎம்ஆர், இசிஆர்) வழியாக அனுமதிக்கப்படும். இந்தப் பேருந்துகள் காவல்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கர்களைக் ஒட்டிக் கொண்டு செல்ல வேண்டும்.

5)   ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, சிஎம்ஆர்எல், ஆலந்தூர் மெட்ரோ, கே.கே.நகர் முன் பூந்தமல்லி உயர் சாலை ஆகியவற்றில் பயணிகளை ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும், அதற்கு பதிலாக அந்த பயணிகளை கோயம்பேடு/ தாம்பரம் அல்லது வண்டலூரிலிருந்து ஏறுமாறு ஏற்பாடுகள் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

6)  கோயம்பேடுவிலிருந்து அனைத்து பயணிகளுடன் புறப்படும் ஆம்னி பேருந்துகள் தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூரைத் தவிர்த்து வண்டலூரை அடைய பிஎச் சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளி வளைய சாலை வழியாக செல்ல வேண்டும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து