முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் மழை - வெள்ளம்: 17.6 லட்சம் மக்கள் பாதிப்பு

திங்கட்கிழமை, 11 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் மழை வெள்ளத்தினால் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வட சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்தது. இதனால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகபட்சமாக அங்கு 185 மிமீ மழை பெய்துள்ளது.  ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மழை வெள்ளத்தினால் அங்கு 17.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1.20 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். சுமார் 1. 8 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.17,000 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 

1981 முதல் 2010 வரை அக்டோபரில் தையுவான் பக்தியின் சராசரி மாதாந்திர மழைப்பொழிவு சுமார் 25 மிமீ. மேலும், லின்ஃபென், லுலியாங் மற்றும் சின்சோ போன்ற பிற நகரங்களில் முந்தைய ஆண்டுகளில் அக்டோபரில் சராசரியாக 50 மிமீ மழையே பொழிந்தது. ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 185 மிமீ மழை பெய்துள்ளதால் பாதிப்பு அதிகமாகியுள்ளது. 

 

மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகள் குறித்து தகவல் ஏதுமில்லை. செவ்வாய்க்கிழமை ஷான்ஸி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக போக்குவரத்து போலீசார் 4 பேர் உயிரிழந்தனர்.  மேலும், தொடர்ந்து வானிலை மோசமாக இருப்பதால் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்புப்பணிகளும் தொய்வடைந்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து