முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பிரதமர் மோடி அரசியல் கோணத்தையே மாற்றியுள்ளார் - அமித் ஷா பெருமிதம்

திங்கட்கிழமை, 11 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பணமதிப்பிழப்பு, 370 சட்டப்பிரிவு ரத்து, முத்தலாக் ரத்து உள்ளிட்டவை பிரதமர் மோடியின் துணிச்சலான முடிவுகள். நாட்டின் அரசியல் கோணத்தையே பிரதமர் மோடி மாற்றியுள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

பிரதமர் மோடி பொதுவாழ்க்கை, மக்கள் பணிக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்த 7-ம் தேதியோடு நிறைவடைந்துவிட்டது. இதையொட்டி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு நேர்காணலில் தெரிவித்ததாவது.,

பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு, நாடுமுழுதும் கடந்த ஆண்டு லாக்டவுன் கொண்டுவந்தது, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புச் சட்டம் 370 பிரிவு ரத்து, விவசாயிகள் போராட்டத்தை அடக்குவது, கருத்து சுதந்திரம் பறிப்பு போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அமித் ஷா பதில் அளிக்கையில், “பணமதிப்பிழப்பு, 370 சட்டப்பிரிவு ரத்து, முத்தலாக் ரத்து உள்ளிட்டவை பிரதமர் மோடியின் துணிச்சலான முடிவுகள். நாட்டின் அரசியல் கோணத்தையே பிரதமர் மோடி மாற்றியுள்ளார். அதனால்தான் அவர் மீதான தனிநபர் தாக்குதல் அதிகரித்துள்ளது.

பிரதமர் மோடிக்கு இந்த அளவுக்கு நம்பிக்கை இருப்பதற்கு காரணம் மக்களுக்குத் தெரியும். பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட விருப்புகள் இல்லை, தேசத்துக்காக பணியாற்றுவதேஅவரின் விருப்பம். பிரதமர் மோடியை ஒவ்வொரு முறை எதிர்க்கட்சி தாக்கும்போதும் ஒவ்வொருமுறையும் அவர் மேலும் வலிமையடைகிறார்.

பிரதமர் மோடி தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடியவர் என்று சிலர் அவரின் மரியாதையைக் குலைக்கும் நோக்கில் தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள். சில கடினமான முடிவுகளை மோடி எடுக்கக்கூடியவர், ஒழுக்கத்தை விரும்பக்கூடியவர். அரசு ரீதியான முடிவுகள், கொள்கை முடிவுகளை எடுக்கும்போது தனது விருப்பங்களை ஒருபோதும் நுழைத்தது இல்லை. நாம் வெறும் அரசை மட்டும் நிர்வகிக்க இங்கு வரவில்லை, தேசத்தை கட்டமைக்க வந்திருக்கிறோம் என்று பிரதமர் மோடி அடிக்கடி கூறுவார்.எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து