முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐகோர்ட் நீதிபதிகள் 7 பேர் இடமாற்றம் : ஜனாதிபதி உத்தரவு

திங்கட்கிழமை, 11 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சென்னை ஐகோர்டு நீதிபதி உள்பட 7 நீதிபதிகள் இடமாற்றம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உள்பட 7 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் 7 மாநில ஐகோர்ட்டு நீதிபதிகளை இடமாற்றம் செய்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது.,

பஞ்சாப் ஐகோர்ட்டு நீதிபதி ராஜன்குப்தா பாட்னாவுக்கும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் கொல்கத்தாவுக்கும், இமாச்சல் பிரதேச ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்வார் தாகூர் பஞ்சாபிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி பஞந்தரி, ராஜஸ்தான் ஐகோர்ட்டு நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா ஆகிய இருவரும் பாட்னா ஐகோர்ட்டுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானா ஐகோர்ட்டு நீதிபதி அமர்நாத் கவுட் திரிபுரா ஐகோர்ட்டுக்கும், அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி சுபாஷ் சந்த் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து