முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நபர் கைது

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் 5 பேர் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஜம்முவின் பஹலின் மண்டல் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டார்.  கடந்த 2-ம் தேதி பஹலின் மண்டல் பகுதியில் டிரோன் மூலம் ஏகே 47 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் விசாரணை நடத்தி வந்த பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு ஆயுத விநியோகம் செய்ய முயற்சித்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் பாதுகாப்புபடையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து