முக்கிய செய்திகள்

20 தோற்றங்களில் நடிக்கும் பிரபுதேவா

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      சினிமா
Prabhu-Deva 2021 10 12

Source: provided

பிரபுதேவா, அமீரா, ஜனனி, சாக்‌ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பஹீரா'. சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய பிரபுதேவா, பெண் வேடம் உட்பட 20-க்கும் மேற்பட்ட தோற்றங்களில் இப்படத்தில் நடித்துள்ளதாகவும், அது தன்னுடைய திரை வாழ்க்கையில் புது அனுபவமாக இருந்தது எனவும் குறிப்பிட்டு பேசினார். 

முன்னதாக பேசிய இயக்குநர் ஆதிக், அமீரா தஸ்தூர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் மொழி அவருக்கு சரியாக தெரியாதென்றாலும், பிரபுதேவாவுடன் அழுது நடிக்கும் உணர்ச்சிகரமான காட்சியில் தனது  அற்புதமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி  அசத்தியுள்ளார் என்றார். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து