முக்கிய செய்திகள்

கதாநாயகியை மையப்படுத்திய தள்ளிப்போகாதே

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      சினிமா
Adarva-anupama 2021 10 12

Source: provided

அதர்வா மற்றும் அனுபமா நடித்துள்ள தள்ளிப்போகாதே படத்தை ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய ஆர்.கண்ணன் ஜெயம்கொண்டான் படத்தில் ஆரம்பித்த எனது பயணம் இன்று வரை தொடர்கிறது. கண்டேன் காதலை படம் போன்ற அழுத்தமான கதை இது. பூமராங் படத்திற்கு பிறகு மீண்டும் அதர்வாவுடன் இணைந்திருக்கிறேன். கபிலன் வைரமுத்துவின் வசனங்கள் இப்படத்திற்கு பலமாக இருக்கும் என்றார்.

பின்னர் பேசிய அதர்வா, "வித்தியாசமான படங்கள் நடிக்க வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தைத் தேர்வுசெய்தேன். இது ஒரு பாசிட்டிவான படம். குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாகியுள்ளது என்றார். முன்னதாக பேசிய பலரும் கதாநாயகியை மையப்படுத்திய படமாக இது வந்துள்ளது என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து