முக்கிய செய்திகள்

முதன் முதலாக வெளியான மாயோன் டீசர்

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      சினிமா
Sibiraj-Tanya 2021 10 12

Source: provided

சிபிராஜ் தாண்யா ரவிச்சந்திரன் இணைந்து நடிக்கும் படம் மாயோன். இப்படத்தை Double Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரிக்க N.கிஷோர் இயக்குகிறார்.

கடவுள், அறிவியல், சிலை கடத்தல், புதையல் வேட்டை என திரில்லர் படமாக உருவாகியுள்ளது.  சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியாவில் முதல் முறையாக, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக, ஒலி விளக்கத்துடன் டீசர் வெளியிடப்பட்டது.

இவ்வகை ஒலி விளக்க டீசர்கள் வெளி நாடுகளில் மட்டுமே இதுவரை இருந்து வந்தது. தற்போது மாயோன் பட டீசரில் வெளியிட்டிருப்பதன் மூலம் இப்படம் இந்தியாவின் முதல் படம் என பெயர் பெற்றுள்ளது. இவ்விழாவில் எஸ்.ஏ,சந்திரசேகர், ராதாரவி, நக்கீரன் கோபால் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு தலைவர் ஜெயஶ்ரீ, இன்ஸ்பையர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து