முக்கிய செய்திகள்

மரண தண்டனைக்கு எதிராக உருவாகும் படம்

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      சினிமா
Atiyoki 2021 10 12

Source: provided

அக்டோபர் 10-ந் தேதி உலகம் முழுக்க தூக்குத்தண்டனைக்கு எதிரான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தூக்குத் தண்டனையை மனித நேய மீறல் என்று சொல்லும் திரைக்கதையோடு  WEC பிலிம் பேக்டரி நிறுவனம் ஆதியோகி சிங்கை எம்.ரவி என்ற பெயரில்  படம் ஒன்றை தயாரிக்கிறது.

உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராகப் போராடும் சர்வதேச மனித உரிமை வழக்கறிஞர் சிங்கப்பூர் தமிழரான ஆதியோகி சிங்கை எம்.ரவி என்பவர். இவர் எழுதிய கம்பாங் பாய்  மற்றும் ஹங் அட் டான்  என்கிற புத்தகங்களின் உண்மையைத் தழுவி இந்த படம் உருவாகிறது. 

பண்டைய தமிழ் மன்னர்கள் மக்களின் நலனுக்காக நீதியுடன் ஆட்சி புரிந்தது ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகிறது. ஒளிப்பதிவாளர் பிரேம் லி இந்தப் படத்தை இயக்குகிறார். விரைவில்  சென்னையில் இதன் படப்பிடிப்பு துவங்கி சிங்கப்பூர், மலேசியா, நைஜீரியா மற்றும் ஜெனிவா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து