முக்கிய செய்திகள்

பிரபாஸின் 25 வது படம் ஸ்பிரிட்

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      சினிமா
Prabhas 2021 10 12

Source: provided

பாகுபலி ஹீரோ பிரபாஸின் 25-வது படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கியுள்ள சந்தீப் இப்படத்தை இயக்குகிறார். ‘

சாஹோ’, ‘ராதே ஷியாம்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ ஆகிய படங்களுடன் பிராபஸுடன் கைகோர்த்த டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட், யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது.

அகில இந்திய அளவில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது. இதற்கு முன் எப்போதும் திரையில் வந்திராத கதைக்களம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளதாக இயக்குனர் ரெட்டி வங்கா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து