முக்கிய செய்திகள்

மக்களின் மகிழ்ச்சியே முக்கியம் – சுந்தர்.சி

Sundar C 2021 10 12

Source: provided

அரண்மனை 1 மற்றும் 2  படங்களைவிட அரண்மனை 3 படம் வித்தியாசமாகவும் மிகச் சிறப்பான கதை அம்சத்துடனும் பிரம்மாண்டமாகவும் இருப்பதாக  இயக்குனர் சுந்தர் சி தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய  இயக்குனர் சுந்தர்.சி. அரண்மனை 3 படம் குஜராத் மாநிலத்தில் 1907ம் ஆண்டு கட்டப்பட்ட வேண்கனியர் பேலஸில் தான் இந்த  அரண்மனை 3 படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது என்றார். தான் ஒரு எளிய பொழுதுபோக்கு கலைஞன் மட்டுமே, புரட்சிகர கருத்தை கூறுவதை விட மக்களின் மகிழ்ச்சியே  முக்கியம் - என்றார். 

அதனைத் தொடர்ந்து பேசிய நாயகன் ஆரியா,  விவேக்குடன் நடிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக ஆசைப்பட்டேன். கடைசி நேரத்தில்தான் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும்  விவேக்குடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்று சொன்னார்.

நாயகிகள் ஆண்ட்ரியா, ராக்ஷி கண்ணா, மனோபாலா, சாக்‌ஷி அகர்வால், விச்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சி.சத்யா இசை அமைத்துளார். இந்த அரண்மனை 3  படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வரும் 14 ஆம் தேதி ஆயுதபூஜை அன்று நாடு முழுவதும் வெளியிடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து