முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவ. 9-ம் தேதி கேதார்நாத் செல்கிறார் பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை, 15 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத்க்கு வருகிற நவ.9-ம் தேதி பிரதமர் மோடி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான கேதார்நாத் ஆலயத்திற்கு பிரதமர் மோடி செல்ல இருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் மதன் கௌசிக் கூறியுள்ளார். முன்னதாக அங்கு 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி சென்றிருந்தார்.  பிரதமர் நரேந்திர மோடி தனது பதவிகாலத்தில் கேதர்நாத் கோவிலுக்குச் செல்வது இது 2-வது முறையாகும். 

தீபாவளிக்குப் பிறகு அடுத்த ஆறு மாதங்களுக்கு கேதார்நாத்  சென்று வழிபட யாத்ரீகளுக்கு அனுமதி இல்லை. கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகியவை கூட்டாக சார் தாம் என்று அழைக்கப்படுகின்றன,

மேலும் இந்த கோவில்கள் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான யாத்ரீகர்களை ஈர்க்கின்றன. இந்நிலையில் உத்தரகண்டில் 2022 , பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து