முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை வலிமையாக்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்: கலாமுக்கு பிரதமர் மோடி புகழாரம்

வெள்ளிக்கிழமை, 15 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவை வலிமையாகவும், வளமாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு நேற்று 90-வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து அப்துல் கலாமுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:-

 

ஏவுகணை நாயகனான முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவை வலிமையாகவும், வளமாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல்கலாம். அவர் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் அப்துல் கலாமுடன் இருக்கும் புகைப்படங்களையும் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து