முக்கிய செய்திகள்

வாங்கிய கடனை செலுத்தவில்லை: மதுவந்தி வீட்டிற்கு சீல்

Madhuvanthi 2021 10 15

நிதிநிறுவனம் ஒன்றில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் பா.ஜ.க செயற்குழு உறுப்பினர்  மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்தனர்.

பாஜக செயற்குழு உறுப்பினராக இருப்பவர் ஒய்ஜி மகேந்திரனின் மகள் ஒய்ஜி மதுவந்தி. நடிகையும்,பாஜக செயற்குழு உறுப்பினருமான இவர் சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2-வது குறுக்கு தெருவில் ஆசியானா அப்பார்ட்மென்டில் தனக்கு சொந்தமாக உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் 2016-ம் ஆண்டு இந்துஜா லேலாண்டு பைனான்ஸ் என்கிற ஒரு நிறுவனத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடன் வாங்கிய சில தினங்களுக்கு மட்டுமே இவர் தவணை தொகையை செலுத்தி வந்தார் பின்னர் தவணையை செலுத்தாமல் இழுக்கடித்து வந்துள்ளார். அந்த பைனான்ஸ் நிறுவனமோ இவரிடம் பலமுறை வலியுறுத்தியும், மதுவந்தி அதற்கு சற்றும் செவி சாய்க்கவில்லை.  இவர் தவணையை செலுத்தாததால் அதிகாரிகள் அசல், வட்டி 1 கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 867 ரூபாயை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். 

 

அவ்வாறு அந்த நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியும் மதுவந்தி பணத்தை திருப்பி செலுத்தவில்லை. மதுவந்தியின் இந்த முறையற்ற செயல் காரணமாக பைனான்ஸ் நிறுவனம் அல்லிக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதிமன்றம் மதுவந்தியின் வீட்டை சீல் வைக்குமாறும் அதனை இந்துஜா பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கியது.  நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுவந்தியின் வீடு சீல் வைக்கப்பட்டு உரிய பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வீட்டை சீல் வைக்கும்பொழுது அதிகாரிகளிடம் மதுவந்தி ' வேண்டாம் சீல் வைக்காதீங்க' என்று கெஞ்சிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து