முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு இடமில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு இடமில்லை என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என்றும், சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் 'பில்டப்' செயற்கையானதாக இருக்கிறது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான பிறகு சசிகலா முதல் முறையாக நேற்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு நேரில் வந்து மரியாதை செலுத்தினார். கண்ணீர் மல்க மரியாதை செலுத்திய சசிகலா, இத்தனை ஆண்டுகள் மனதில் தேக்கி வைத்திருந்த  பாரத்தை இறக்கி வைத்திருப்பதாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறினார். 

இந்த நிலையில், சசிகலாவை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என்று சாடியுள்ளார். ஜெயக்குமார் மேலும் கூறியதாவது;-

சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் 'பில்டப்' செயற்கையானதாக இருக்கிறது. இயற்கையாக இல்லை. ஒரு நாளுக்கு லட்சக்கணக்கானோர் ஜெயலலிதா நினைவிடம் செல்கின்றனர். அந்த லட்சக்கணக்கானோரில் இவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். அதில் பெரிய விசேஷம் கிடையாது. 

இது பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாது. அவர் நினைப்பது நடக்கப்போவதில்லை. அ.தி.மு.கவில் சசிகலாவுக்கு இடமில்லை. அ.தி.மு.கவைக் கைப்பற்ற நினைப்பது பகல் கனவு. சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம். அ.தி.மு.கவில் அவருக்கு இடம் கிடையாது” என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து