முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒரு சுதந்திர யாத்திரை ஸ்தலம் : மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

போர்ட் ப்ளேர் : அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒரு சுதந்திர யாத்திரை ஸ்தலம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்தமான் நிக்கோபார் தீவுகள் சென்றுள்ளார். சுபாஷ் சந்திரபோஸ் தீவில் நேற்று பல்வேறு நலத்திட்டங்களை திறந்து வைத்த நிலையில், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் டி.கே.ஜோஷி கலந்து கொண்டார்.

பின்னர் அமித் ஷா பேசுகையில் ‘‘அந்தமான்- நிக்கோபார் தீவுகள் ஒரு சுதந்திர யாத்திரை ஸ்தலம். இளைஞர்கள் அனைவரும் ஒருமுறையாவது அந்தமான்- நிக்கோபார் தீவுகள் செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து