முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியா குமரியில் கொட்டி தீர்த்த கனமழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு - வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது

ஞாயிற்றுக்கிழமை, 17 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரமாக தினமும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்யுமென்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி இரு தினங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் முழுவதும் மழை பெய்யத் தொடங்கியது. இரவும் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது.

நாகர்கோவிலில் நேற்று முன் தினம் இரவு பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. நேற்று காலை 9 மணி வரை வானம் இருள் சூழ்ந்த நிலையில் இருந்தது. மழையும் பெய்து கொண்டே இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை ஓட்டி சென்றனர்.

மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. அவ்வை சண்முகம் சாலை, கோட்டார் சாலை, செட்டிக்குளம் சாலை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நாகர்கோவில் ரெயில்வே குடியிருப்பை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

மழையின் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. நாகர்கோவிலில் அதிகபட்சமாக 63 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

கொட்டாரம், மயிலாடி பகுதிகளிலும் இடைவிடாது கொட்டிய மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் இரவு பல கிராமங்கள் இருளில் மூழ்கியது. பூதப்பாண்டி, சுருளோடு, அடையாமடை, கோழிப்போர்விளை, குளச்சல், ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், களியல், திருவட்டார் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

நேற்று காலையிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும் மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் கொட்டி வரும் மழையால் அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து அதற்கேற்ப தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறையாறு, கோதையாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குழித்துறையாற்றில் சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. மலையோர கிராமங்களான குற்றியாறு, கிழவியாறு, மணலோடை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக மலையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.60 அடியாக உள்ளது. அணைக்கு 1,373 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,450 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.72 அடியாக உள்ளது. அணைக்கு 997 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,980 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து