முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவிற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்: அமித்ஷா உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 17 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். 

இது தொடர்பாக அமித்ஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: -

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கேரளாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம்.  மீட்பு நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு ஏற்கனவே கேரளா விரைந்துள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

கேரளாவின் தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் மாநில நிர்வாகம் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து