முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு அணையில் ஆண்டுக்கு 2 முறை 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம் : மத்திய நீர்வள ஆணையம் தமிழகத்திற்கு அனுமதி

திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : முல்லை பெரியாறு அணை வலுவாக உள்ளதாகவும், அதனுடைய பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு இனி எதுவும் இல்லை எனவும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும், ஆண்டிற்கு 2 முறை முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்கி வைத்துக்கொள்ள தமிழக அரசுக்கு மத்திய நீர் வள ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. 

தமிழ்நாடு, கேரள விவசாயிகளின் பாசனத்துக்கு பயன்படும் முல்லை பெரியாறு அணை விஷயத்தில் கேரள அரசு முரண்டு பிடித்து வருகிறது. அதில் முழு கொள்அளவு நீரை தேக்கி வைக்க கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம்கோர்ட் கடந்த 2014ம் ஆண்டு, முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியாக உயர்த்த அனுமதி வழங்கியது. அத்துடன், அதைத்தொடர்ந்து அணையின் உறுதித்தன்மை குறித்து அணையில் தண்ணீர் தேக்குவதை கண்காணிப்ப தற்காக 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவையும் சுப்ரீம் கோர்ட் நியமனம் செய்தது. இந்த கண்காணிப்பு குழுவினர் அவ்வப்போது அணையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த வழக்கில், சர்வதேச நிபுணர்களை கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்யக்கோரி கேரள அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில்,  முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஅரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே இருப்பதால் பாதுகாப்பு பற்றி பேச இனி எதுவுமில்லை. அணை கதவுகள், மதகுகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்த பழுதுகள் சரி செய்யப்பட்டு விட்டன.  இன்னும் இருக்கும் சிறு விறு வேலைகளும் இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டிற்கு இருமுறை 142 அடி தண்ணீரை தேக்கிவைக்க தமிழகத்திற்கு மத்திய நீர் வள ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசு சமர்பித்த அறிக்கையின்படி, ஆணையம் ஒப்புதல் வழங்கியது கேரள அரசிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து