முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் நவம்பர் 16-ம் தேதி வரை சபரிமலைக்கு பக்தர்கள் வரத்தடை

திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : சபரிமலைக்கு துலாம் மாதம் இறுதி வரை (நவ. 16-ம் தேதி) பக்தர்கள் வர தடைவிதிக்கப்பட்டிருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சபரிமலை கோயில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருவதால், பம்பா நதியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பா நதி நீரி செல்லும் மணியாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பம்பா நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மலையாளத்தின் துலா மாதப்பிறப்பையொட்டி, கடந்த 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. அடுத்த நாள் கோவிலின் மேல் சாந்தி தேர்வு செய்யப்பட்டார். நடைதிறப்பை முன்னிட்டு 5 நாட்கள் அதாவது 21ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படவிருந்தது. ஆனால், பத்தினம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதாலும், பம்பா நதியில் அபாயக் கட்டத்தைதாண்டி நீர் செல்வதாலும் சபரிமலைக்கு பக்தர்கள் வருவதைத் தவிர்க்குமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதற்கிடையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மழை பாதிப்பு காரணமாக இன்று முதல் பக்தர்கள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் மழை பாதிப்பு காரணமாக சபரிமலைக்கு  நவம்பர் 16-ம் தேதி வரை (துலா மாதம் முழுவதும்) பக்தர்கள் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து