முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை அனுப்புகிறது

செவ்வாய்க்கிழமை, 19 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தலிபானுடனான இந்தியாவின் உறவை பொருட்படுத்தாமல் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தடையற்ற மற்றும் மனிதாபிமான உதவி செய்யப்படும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு பன்னாட்டு அமைப்புகளும், வளர்ந்த நாடுகளும் அளித்து வந்த நிதி உதவியை நிறுத்தி விட்டதால் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் ஆப்கானிஸ்தான் சிக்கி தவித்து வருகிறது. உணவு தேவைகளை பூர்த்தி செய்ய கடந்த 10 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா கோதுமை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 75 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை நன்கொடையாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது.

ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு உதவிகளை அனுப்புவது பெரும் சவாலாக உள்ளது. இதற்கிடையே கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானிற்கு கோதுமை வழங்குவது குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமானம் அடிப்படையில் உதவுபவர்களுக்கு தடையற்ற மற்றும் நேரடி அணுகுமுறையை இந்தியா விரும்புகிறது என்றும், இந்த உதவிகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் பாகுபாடின்றி போய் சேர வேண்டும் என்றும் வெளியுறவு விவகாரத்துறை மந்திரி எஸ்.ஜெயசங்கர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள உணவு பொருட்களின் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்தியா 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக அனுப்ப திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “தலிபானுடனான இந்தியாவின் உறவை பொருட்படுத்தாமல் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தடையற்ற மற்றும் மனிதாபிமான உதவி செய்யப்படும், ஆப்கானிஸ்தான் மக்களுடனான பாரம்பரிய நட்பு உறவு மற்றும் அணுகுமுறையை தொடர்ந்து சுமூகமாக வழிநடத்தும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து