முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்: நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சோகம்

செவ்வாய்க்கிழமை, 19 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சோக சம்பவம் தெரியவந்துள்ளது.

கேரளாவில் கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, ஆலப்புழை, எர்ணாகுளம், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

தொடர் மழை காரணமாக கோட்டயம் மாவட்டம் குட்டிக்கல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பிளாப்பள்ளி, காவாலி ஆகிய பகுதிகளில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீடுகள் தரைமட்டமானது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 13 பேரும் உயிரோடு மண்ணுக்கு புதைந்து பலியானார்கள். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கிளாரம்மா (வயது 63), அவரது மகன் மார்ட்டின் (48), மார்ட்டின் மனைவி ஷினி (45), மகள்கள் ஸ்னேகா (14), சோனா (12) சாந்த்ரா (10) ஆகிய 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

மேலும் மரணம் அடைந்த சிசலி (50), வேணு (48), சோனியா (45), அவரது மகன் ஜோபி (15), ராஜம்மா (64), ஷாலட் (29), சரசம்மா (58) ஆகிய 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. பின்னர் இவர்களின் உடல்கள் கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் காஞ்சிரப்பள்ளி அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை நடந்தது. பிறகு உடல்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து