முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் தமிழில் வாழ்த்து

புதன்கிழமை, 20 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 9 மாவட்டங்களைச் சேர்ந்த 8 யூனியன் கவுன்சிலர்கள், 41 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 381 வார்டு உறுப்பினர்களை நேரில் சந்தித்தேன் என்று பதிவிட்டிருந்தார். அதில் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவியையும் டேக் செய்திருந்தார். #381பாஜக என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்தி அவர் இந்த ட்வீட்டை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று அந்த ட்வீட்டிற்கு தமிழில் பதிலளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து