முக்கிய செய்திகள்

யூடியூப் சேனல்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த நடிகை சமந்தா?

வியாழக்கிழமை, 21 அக்டோபர் 2021      சினிமா
Samantha---2021-10-21

தன்னைப் பற்றிய அவதூறான செய்திகளைப் பரப்பியதாக சில யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் தனது கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக சமந்தா அறிவித்தார். நாக சைதன்யாவும் இதே அறிக்கையைப் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து சமந்தாவின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைத்தளங்களிலும், சில யூடியூப் சேனல்களிலும் விவாதிக்கப்பட்டன. இதையடுத்து தனது தனிப்பட்ட விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், எந்த விதமான எதிர்மறை விஷயங்களும் தன்னை பாதிக்காது என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்நிலையில் தன்னைப் பற்றி அவதூறாக செய்திகளைப் பரப்பியதாக  சுமன் டிவி உள்ளிட்ட சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாகப் பேசியதாக, அவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து