முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்.லில் 2022-ல் அறிமுகமாகும் 2 புதிய அணிகளை வாங்கும் போட்டியில் 12 நிறுவனங்கள்

வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல் புதிதாக அறிமுகப்படுத்தப் படவுள்ள 2 அணிகளை வாங்கும் போட்டியில் 12 நிறுவனங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் தற்போது 8 அணிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஐ.பி.எல் போட்டியில் இரு புதிய அணிகளைச் சேர்க்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஆகஸ்ட் மாத இறுதியில் பிசிசிஐ வெளியிட்டது. இதையடுத்து அடுத்த வருடம் முதல் ஐ.பி.எல் போட்டியில் 10 அணிகள் போட்டியிடவுள்ளன.

துபாயில் ஏலம்...

இந்த 2 அணிகளையும் வாங்குவதற்கான ஏலம் வரும் அக்டோபர் 25-ம் தேதியன்று துபாயில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது. இரண்டு அணிகளையும் ஏலம் விட்டப்பிறகு எந்த ஊரை மையமாக கொண்டிருக்கும் என்ற அறிவிப்புகள் வெளியாகவுள்ளது. இந்தப் புதிய அணிகள் அகமதாபாத், லக்னோ நகரங்களை மையமாக வைத்து உருவாக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பல நிறுவனங்கள்... 

இதனையடுத்து 2 புதிய அணிகளையும் வாங்குவதற்காக இந்தியாவை சேர்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டிப்போட்டு வருகின்றன. ஏற்கனவே அதானி குழுமம், ஆர்பி சஞ்சீவ் கோங்கே உள்ளிட்ட நிறுவனங்கள் தீவிர முனைப்புடன் உள்ளது. இதே போன்று அயல்நாட்டை சேர்ந்த பணம் முதலீட்டு நிறுவனங்களும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன.

புதிய அணிகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களின் பட்டியல் இதோ..

1) சஞ்சீவ் குமார் - ஆர்.பி.எஸ்.ஜி.

2) கிளாசர் குடும்பம் - மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர்கள்.

3) அதானி குழுமம்.

4) நவீன் ஜிண்டால் - ஜிண்டால் பவர் & ஸ்டீல்.

5) டோரண்ட் பார்மா.

6) ரோனி ஸ்க்ரூவாலா.

7) அரபிந்தோ மருந்து நிறுவனம்.

8) கோடக் குழுமம்

9) சிவிசி பாட்னர்ஸ்.

10) சிங்கப்பூர் சார்ந்த PE நிறுவனம்.

11) ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியா.

 

12) ஒளிபரப்பு மற்றும் விளையாட்டு ஆலோசனை முகமைகள் ITW, குழு எம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து