முக்கிய செய்திகள்

அடுத்த ஆண்டு ஜூலையில் நடக்கிறது இந்தியா- இங்கி. 5வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

England-Cricket 2021 10 22

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒத்திவைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

தொடரில் முன்னிலை...

கொரோனா பரவல் அச்சத்தால் ஐந்தாவது போட்டி ஒத்திவைக்கப்பட்டது. செப்டம்பர் 10 முதல் 14-ஆம் தேதி வரையில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் நான்கு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இந்தியா 2 - 1 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. 

எட்ஜ்பேஸ்டனில்... 

 

அந்த போட்டி அடுத்த ஆண்டு (2022) ஜூலையில் 1 முதல் 5-ஆம் தேதி வரையில் எட்ஜ்பேஸ்டனில் நடைபெற உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியா அடுத்த ஆண்டு மேற்கொள்ள உள்ள இந்த பயணத்தில் மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் விளையாட உள்ள கிரிக்கெட் தொடரின் அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வெளியிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து