முக்கிய செய்திகள்

ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் புதிய டெல்டா வகை வைரஸ் பரவுகிறது : உலக சுகாதார அமைப்பு தகவல்

சனிக்கிழமை, 23 அக்டோபர் 2021      உலகம்
World-Health 2021 10 06

Source: provided

ஜெனீவா : புதிய மாறுபாடு கொண்ட டெல்டா வகை வைரஸ் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், புதிய உருமாறிய டெல்டா வகை வைரசான ஏ ஒய் 4 பாயின்ட் 2 என்ற புதிய வைரஸ் பல ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து பரவியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் அதிகமாக பரவக்கூடியது என்பதற்கான தெளிவான அறிகுறி எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, ஆல்பா மற்றும் டெல்டா வகைகள் போன்ற பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

வேகமாகப் பரவக்கூடியது

கொரோனா வைரசின் புதிய திரிபை சிலர் 'டெல்டா பிளஸ்' என்று அழைக்கிறார்கள். அத்திரிபு வழக்கமான டெல்டா திரிபை விட எளிதாக பரவக்கூடியதாக இருக்கலாம் என பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர்கள் தற்போது கூறுகின்றனர். யூகே ஹெல்த் செக்யுரிட்டி ஏஜென்சி எனப்படும் சுகாதார பாதுகாப்பு அமைப்பு, இத்திரிபை 'ஆய்வில் உள்ள திரிபு' என வகைப்படுத்தியுள்ளது. இந்த புதிய டெல்டா பிளஸ் திரிபு ஏற்கெனவே உள்ள திரிபுகளைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என் சொல்வதற்கு ஆதாரம் இதுவரை இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து