முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் 'வலிமை' சிமெண்ட் வந்தால் விலை மேலும் குறையும் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சனிக்கிழமை, 23 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக அரசின் 'வலிமை' சிமெண்ட் வந்தால் விலை மேலும் குறையும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கடந்த 7-ம் தேதி தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், ‘நாடு முழுவதும் உள்ள அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கான நிலக்கரி கையிருப்பு என்பது குறைந்து வருகிறது. இதனால் விரைவில் நிலக்கரி தட்டுப்பாடு என்பது உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சிமெண்ட் உற்பத்தி செய்யும் ஆலைகளில் முக்கிய எரிபொருள் நிலக்கரி என்பதால் அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டியுள்ளது. இதனால் 50 கிலோ எடை கொண்ட ஒரு சிமெண்ட் மூட்டையின் உற்பத்தி விலை 60 ரூபாய் அதிகரிக்கும் நிலை உள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் சிமெண்ட் விலையேற்றம் என்பது நுகர்வோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் டான்செம் நிறுவனத்தின் சிமெண்ட் 'வலிமை' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், வலிமை சிமெண்ட் அறிமுகமாகி வெளியே வந்தால் சிமெண்ட் விலை குறையும் என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

மேலும் இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “சிமெண்ட் விலையை மேலும் 20 ரூபாய் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. சிமெண்ட் விலை 33 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிமெண்ட் மூட்டை விலை தற்போது 420 ரூபாயிலிருந்து 440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் வலிமை சிமெண்ட் மாதம் ஒன்றிற்கு 30 ஆயிரம் மெகா டன் விற்கப்பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து