முக்கிய செய்திகள்

பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு - கங்குலி கணிப்பு

Ganguly 2021 10 23

Source: provided

துபாய் : உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை 13-வது முறையாக இந்தியா ஜெயிக்க அதிக வாய்ப்புள்ளது என பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

இந்தியா வெற்றி...

உலகக் கோப்பைப் போட்டிகளில் (50 ஓவர், டி20) இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கு முன்பு 12 முறை மோதியதில் அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணி வென்றுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 7 முறையும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 5 முறையும் இந்திய அணி பாகிஸ்தானைத் தோற்கடித்துள்ளது. 

வெல்லவில்லை...

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் பற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி ஒரு பேட்டியில் கூறியதாவது., இந்தியா 13-வது முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 13-0 என முன்னிலை பெற அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணியில் உள்ள எல்லா வீரர்களும் ஆட்டத்தில் வெற்றியைத் தரக்கூடிய திறமை உள்ளவர்கள். உலகக் கோப்பையைக் கடந்த 10 வருடங்களாக நாம் வெல்லவில்லை. அந்தக் குறையை இந்த அணி போக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து